HomeLifestyleஉங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து வருவதை உணர்த்தும் அறிகுறிகள்!

உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்து வருவதை உணர்த்தும் அறிகுறிகள்!

கோடை வெயிலின் தீவிரம் அதிகரித்து வரும் இந்த காலகட்டத்தில், உடலின் நீர்ச்சத்தை பராமரிப்பது மிக அவசியமானதாகிறது. வெப்பத்தால் உடலில் தண்ணீர் குறையும்போது நீர்ச்சத்து குறைந்து பல்வேறு உடல்நல பிரச்சினைகள் உருவாகும்.

நீர்ச்சத்து குறைந்து வருவதை உணர்த்தும் அறிகுறிகள்

சிறுநீரின் நிற மாற்றம்

சிறுநீர் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் உடல் நன்றாக ஹைட்ரேட் ஆகியுள்ளது. ஆனால் அடர் மஞ்சள் நிறமாக இருந்தால், உடல் தண்ணீரை சேமிக்க முயற்சிக்கிறது என்பதற்கான அறிகுறி. மேலும், ஒரு நாளில் 4 முறைக்கும் குறைவாக சிறுநீர் கழிப்பது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை.

இதையும் படிங்க : தர்பூசணி சாப்பிடும் போது இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. இல்லைனா பிரச்சனைதான்

தொடர்ச்சியான தலைவலி

உடல் நீர்ச்சத்து குறைந்தால், தலைவலி உருவாகும். வெயிலில் அதிக நேரம் இருந்தபின் காரணமின்றி தலைவலி இருந்தால், அது தண்ணீர் தேவைப்படுவதைச் சுட்டிக்காட்டும்.

அதிக சோர்வு மற்றும் பலவீனம்

நீர்ச்சத்து குறையும்போது, இரத்தத்தின் அளவு குறைந்து உடல் உறுப்புகளுக்கு ஆக்ஸிஜன் செல்லும் வேகம் பாதிக்கப்படும். இதனால், நீண்ட நேரம் ஓய்வு எடுத்தாலும் உடல் சோர்வாகவே இருக்கும்.

இதையும் படிங்க : ஏசியால் கரண்ட் பில் அதிகம் வருதா? இந்த தவறை பண்ணாதீங்க

வாய் துர்நாற்றம்

உமிழ்நீர் குறைவதால் வாயில் பாக்டீரியா அதிகரிக்கும். இதனால் வாய் வறண்டு போகும், துர்நாற்றம் ஏற்படும். இது Dehydration-ன் பொதுவான அறிகுறிகளில் ஒன்று.

தலைசுற்றல்

உடலில் நீர் குறைந்தால் இரத்த அழுத்தம் குறையும். அதனால் மூளைக்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காமல், உட்கார்ந்த நிலையிலிருந்து திடீரென எழும்போது தலைசுற்றல் ஏற்படும்.

இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று தெரிந்தாலே உடனடியாக தண்ணீர் குடிப்பது முக்கியம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments