HomeSpecial Airtcle2026 தேர்தலில் திமுகவின் பின்னடைவுக்கு இதுதான் காரணம்

2026 தேர்தலில் திமுகவின் பின்னடைவுக்கு இதுதான் காரணம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியதும், முதற்கட்ட எண்ணிக்கைகளில், தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் உள்ளது. வழக்கமாக தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் திமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் தான் மாறி மாறி ஆட்சி அமைக்கும். ஆனால் 2026 தேர்தல் இப்படி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் எனபதை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

திமுக தான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது நிலவரம் தலைகீழாக மாறியுள்ளது. திமுகவின் இந்த பின்னடைவுக்கு என்ன காரணம் எனபதை இந்த பதிவில் பார்ப்போம்.

திமுக 2021 தேர்தலில் 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் அளித்தது. ஆனால் அவற்றில் பல முழுமையாக நிறைவேறவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

நிறைவேற்றிவிட்டோம் என அரசு கூறினாலும் நடைமுறையில் பல திட்டங்கள் பகுதியளவில் மட்டுமே செயல்பட்டதாக விமர்சனம் எழுந்தது.

மின்துறை, ஒப்பந்தங்கள் போன்றவற்றில் அதிக விலைக்கு வாங்குதல், டெண்டர் முறைகேடு போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. குறிப்பாக ₹397 கோடி டிரான்ஸ்ஃபார்மர் கொள்முதல் விவகாரம் குறித்து விசாரணையை அரசு தடுக்க முயன்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

பெட்ரோல், அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம் போன்றவற்றில் விலை உயர்வு அதிகரித்தது என எதிர்க்கட்சிகள் கூறின. இது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு சுமையாக இருந்தது.

மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துவிட்டது என்றும் பொருளாதார மேலாண்மை சரியாக இல்லை என்றும் விமர்சனம் எழுந்தது.

புதிய வேலை வாய்ப்புகள் போதுமான அளவில் இல்லை. IT/தொழில் வளர்ச்சி இருந்தாலும், அது எல்லா சமூகத்துக்கும் சமமாக பயன் தரவில்லை என்று சிலர் கருதுகின்றனர். திமுக மீது நீண்டநாள் இருந்து வரும் “family politics” குற்றச்சாட்டு போன்ற காரணங்களால் இந்த தேர்தலில் திமுக கடும் பின்னடைவை சந்தித்து இருக்கலாம் என பார்க்கப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments