HomeSpecial AirtcleCCTV கேமரா வைக்கும் முன் இதை மறக்காதீர்கள்: தனியுரிமை மீறினால் நடவடிக்கை!

CCTV கேமரா வைக்கும் முன் இதை மறக்காதீர்கள்: தனியுரிமை மீறினால் நடவடிக்கை!

திருட்டு, அத்துமீறல் உள்ளிட்ட சம்பவங்களை கண்காணிக்க வீடுகள், கடைகள், அலுவலகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களில் CCTV கேமராக்கள் பொருத்தப்படுவது தற்போது வழக்கமாகிவிட்டது.

கேமரா வைக்கும் போது மற்றவர்களின் தனியுரிமை பாதிக்காத வகையில் அதை பயன்படுத்துவது முக்கியம். குறிப்பாக, கேமரா எந்தப் பகுதியை பதிவு செய்கிறது, அந்தக் காட்சிகள் எவ்வளவு காலம் சேமிக்கப்படுகின்றன, யாருடன் பகிரப்படுகின்றன போன்ற விஷயங்களில் கவனம் தேவை.

வீட்டு உரிமையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள்

உங்கள் சொத்தை பாதுகாப்பதற்காக பொதுப்பாதையின் ஒரு பகுதி கேமராவில் பதிவாகலாம். ஆனால், கேமராவின் கோணத்தை திட்டமிட்டு அண்டை வீட்டின் தனிப்பட்ட பகுதிகளை நோக்கி திருப்புவதை தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பு என்ற காரணத்தை கூறி மற்றொருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தொடர்ந்து கண்காணிப்பது சட்டரீதியான பிரச்சனைக்கு வழிவகுக்கலாம்.

இதையும் படிங்க : எஸ்கலேட்டர் ஓரத்தில் இருக்கும் பிரஷ் எதற்காக? பலருக்கும் தெரியாத உண்மை

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் பிரிவு 66E, ஒருவரின் தனிப்பட்ட பகுதியை அவருடைய அனுமதியின்றி, தனியுரிமையை மீறும் சூழலில் பதிவு செய்வதை குற்றமாக்குகிறது.

இந்தப் பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 ஆண்டுகள் வரை சிறை அல்லது ரூ.2 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். எனவே, CCTV கேமராவை பாதுகாப்புக்காக மட்டுமே பயன்படுத்துவது மிகவும் முக்கியம்.

CCTV காட்சிகளை எப்படி கையாள வேண்டும்?

CCTV பதிவு செய்யப்பட்ட பிறகு அதன் பாதுகாப்பும் முக்கியம். தேவையில்லாமல் காட்சிகளை சமூக வலைதளங்களில் பகிரக்கூடாது.

குற்றச்சம்பவம் நடந்தால் காவல்துறை விசாரணைக்கு தேவையான காட்சிகளை பாதுகாத்து வழங்குவது உதவியாக இருக்கும். அதே நேரத்தில், சம்பந்தமில்லாத நபர்களின் தனிப்பட்ட காட்சிகளை தேவையின்றி வெளியிடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

இதையும் படிங்க : உங்களை மட்டும் கொசுக்கள் அதிகம் கடிக்கிறதா? ஆய்வுகள் சொல்லும் காரணங்கள்!

RELATED ARTICLES

Most Popular

Recent Comments