HomeTamilnaduஆவின் நீல நிற பால்பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற நெடி

ஆவின் நீல நிற பால்பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற நெடி

மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட ஆவின் நீல நிற பால்பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக் மற்றும் குளோரின் போன்ற நெடி வீசுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து உணவுப் பாதுகாப்புத் துறையினர் பால் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்காக அனுப்பியுள்ளனர்.

பொதுமக்கள் அளித்த புகார்

மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்பட்ட ஆவின் நீல நிற பால்பாக்கெட்டுகளை பயன்படுத்திய சிலர், பாலில் பிளாஸ்டிக் அல்லது குளோரின் போன்ற நெடி வீசுவதாக கூறி உணவுப் பாதுகாப்புத் துறையிடம் புகார் அளித்தனர்.

ஆய்வுக்கு அனுப்பப்பட்ட பால்

பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறையினர் மதுரை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் டெப்போக்களில் இருந்து நீல நிற பால்பாக்கெட்டுகளை சேகரித்து தரப் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆய்வக அறிக்கையின் அடிப்படையில், புகாரின் உண்மை நிலை குறித்து அதிகாரப்பூர்வ முடிவு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆவின் நிர்வாகம் அளித்த விளக்கம்

இந்த விவகாரம் தொடர்பாக மதுரை ஆவின் நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், புகார் கிடைத்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளது. விசாரணையில், பால்பாக்கெட்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் ரோலில் ஏற்பட்ட குறைபாடு காரணமாகவே நெடி ஏற்பட்டது என கூறப்பட்டுள்ளது.

அந்த பால்பாக்கெட்டுகள் மாற்றப்பட்டு, தற்போது புதிய தரமான பாக்கெட்டுகளில் பால் நிரப்பி விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் அனைவரும் தினமும் பயன்படுத்தும் பாலில் இப்படி ஒரு புகார் வந்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தமிழகத்தில் நடப்பு ஆண்டில் நாய்க்கடியால் 4.68 லட்சம் பேர் பாதிப்பு

RELATED ARTICLES

Most Popular

Recent Comments