HomeTamilnadu"4 சதவீதத்தை 40 சதவீதமாக மாற்றுவோம்" - தேர்தல் தோல்விக்குப் பிறகு நாம் தமிழர் நிர்வாகிகளின்...

“4 சதவீதத்தை 40 சதவீதமாக மாற்றுவோம்” – தேர்தல் தோல்விக்குப் பிறகு நாம் தமிழர் நிர்வாகிகளின் நம்பிக்கை

சமீபத்திய தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. இந்த தேர்தலில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாமால் படுதோல்வி அடைந்தது.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம், கட்சியின் எதிர்காலம் மற்றும் உள்கட்சி விவகாரங்கள் குறித்து விவாதம் நடைபெற்றது. இதில், கட்சி நிர்வாகிகளுக்கும் Gen Z இளைஞர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.

வாக்கு சதவீதம் குறித்த கேள்வி

கலந்துரையாடலில் பங்கேற்ற இளைஞர் ஒருவர், நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் முந்தைய தேர்தலுடன் ஒப்பிடும்போது குறைந்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

தமிழக அரசியலில் புதிய அரசியல் கட்சிகள் உருவாகும் சூழலில், கட்சி தனது ஆதரவை எவ்வாறு அதிகரிக்கப் போகிறது, அதற்கான திட்டம் என்ன என்பதையும் அவர் கேள்வியாக முன்வைத்தார்.

சாட்டை துரைமுருகன் பதில்

இதற்கு பதிலளித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன், கட்சி ஆரம்பத்திலிருந்தே பூஜ்ஜியத்தில் இருந்து வளர்ந்ததாகக் குறிப்பிட்டார். உள்கட்சி தொடர்பான விவகாரங்களை பொதுவெளியில் விவாதிப்பது சரியான நடைமுறை அல்ல என்றும், ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஒழுங்கு விதிமுறைகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“இந்த தேர்தல் ஒரு பேரிடர்” – இடும்பாவனம் கார்த்தி

இந்த விவாதத்தில் கலந்து கொண்ட மற்றொரு நிர்வாகியான இடும்பாவனம் கார்த்தி, தேர்தல் முடிவை ஒரு அரசியல் பின்னடைவாகக் குறிப்பிட்டார்.

4 விழுக்காட்டை 40 விழுக்காடாக மாற்றுவதற்கு 5 ஆண்டு காலம் ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு களத்தில் உழைப்போம். தங்கள் செய்த தவறை மக்கள் திருத்திவிட்டு உங்களை அங்கீகரிக்கும் நிலையை உருவாக்குவோம்” என்றார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments