HomeTamilnaduபயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ; திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் தற்காலிக மாற்றம்

பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ; திருச்சி வழியாக செல்லும் ரெயில்களில் தற்காலிக மாற்றம்

தெற்கு ரெயில்வே மேற்கொண்டு வரும் பராமரிப்பு பணிகளின் காரணமாக, திருச்சி வழியாக இயக்கப்படும் சில பயணிகள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் சேவையில் தற்காலிக மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

திருச்சி–காரைக்கால் டெமு ரெயில் பகுதியாக ரத்து

திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி–காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண்: 76820), ஆகஸ்ட் 7 முதல் 10 வரை பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயில் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.

காரைக்கால்–திருச்சி டெமு சேவையிலும் மாற்றம்

காரைக்காலில் இருந்து மாலை 2.55 மணிக்கு புறப்படும் காரைக்கால்–திருச்சி டெமு ரெயில் (வண்டி எண்: 76819)-க்கும் இதே காலகட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ரெயில் காரைக்கால்–திருவாரூர் இடையே இயக்கப்படாது. அதற்கு பதிலாக, திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி வரை இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப்பாதையில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்கள்

பராமரிப்பு பணிகளின் காரணமாக சில முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களும் வழக்கமான பாதையை மாற்றி இயக்கப்படுகின்றன.

செங்கோட்டை–மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (16848) – ஆகஸ்ட் 8 முதல் 11 வரை.
கன்னியாகுமரி–ஹவுரா அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12666) – ஆகஸ்ட் 8.
நாகர்கோவில்–மும்பை சி.எஸ்.எஸ்.எம். எக்ஸ்பிரஸ் (16352) – ஆகஸ்ட் 9.

இந்த ரெயில்கள் வழக்கமான பாதைக்கு பதிலாக மதுரை – மானாமதுரை – காரைக்குடி வழியாக திருச்சி செல்லும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments