HomeTamilnadu"தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானப்படவும் தயாராக இருந்தேன்" – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு

“தமிழ்நாட்டு மக்களுக்காக அவமானப்படவும் தயாராக இருந்தேன்” – சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவிரி நீர், மேக்கேதாட்டு அணை விவகாரம் மற்றும் குறுவை சாகுபடி தொடர்பாக விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்கு முதல்வர் ஜோசப் விஜய், பதிலளித்தார்.

அப்போது அவர் பேசியதாவது : “தமிழ்நாட்டின் நலனுக்காக பெங்களூரு சென்று பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சிக்காக எந்தவிதமான விமர்சனத்தையும், அவமானத்தையும் எதிர்கொள்ள தயாராக இருந்ததாக தெரிவித்தார்.

மாநிலங்களுக்கிடையேயான நீர்வளப் பிரச்சனைகளை அரசியல் கண்ணோட்டத்தில் அணுகாமல், மக்களின் நலனை முன்னிறுத்தி தீர்வு காண வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடு என்றும் அவர் வலியுறுத்தினார்.

காவிரி விவகாரத்தில் அரசியல் தேவையில்லை

சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், காவிரி நதி தமிழ்நாட்டின் உயிர்நாடி என்றும், அது உணர்வுபூர்வமான பிரச்சினை என்றும் குறிப்பிட்டார். இதுபோன்ற முக்கியமான விவகாரத்தில் அரசியல் லாபம் தேடுவது சரியான அணுகுமுறை அல்ல என்று அவர் கூறினார்.

மேக்கேதாட்டு அணை தொடர்பாக சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் ஒற்றுமையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை பிரதமருக்கு அனுப்பியதாகவும், பின்னர் மத்திய அரசின் விளக்கத்தில் அனைத்து விவரங்களும் இடம்பெறாததால், முழுமையான தகவல்களுடன் மறுநாளே மீண்டும் கடிதம் அனுப்பியதாகவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டின் உரிமையில் எந்த சமரசமும் இல்லை

காவிரி நீர் பங்கீடு மற்றும் மேக்கேதாட்டு அணை தொடர்பாக தமிழ்நாட்டின் உரிமையை அரசு எந்த நிலையிலும் விட்டுக்கொடுக்காது என்று முதல்வர் உறுதியளித்தார்.

கர்நாடகத்தில் அணைகள் கட்டும் விவகாரம் பல ஆண்டுகளாக இருந்து வரும் பிரச்சினை என்றும், கடந்த கால அரசுகளை குற்றம் சாட்டி அரசியல் செய்வதில் தமக்கு விருப்பமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்றார்.

“பெங்களூரு செல்ல நினைத்தது மக்களுக்காக”

பெங்களூரு சென்று கர்நாடக அரசுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம் குறித்தும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

நல்ல முடிவு கிடைக்குமா என்ற நம்பிக்கையில்தான் அந்த முயற்சியை மேற்கொள்ள நினைத்ததாக கூறிய அவர், தற்போதைய உலக சூழலில் பகை நாடுகள்கூட பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில், அண்டை மாநிலத்துடன் உரையாடுவதில் தவறு இல்லை என்ற கருத்தை முன்வைத்தார்.

அந்த முயற்சி தோல்வியடைந்தாலும் அல்லது விமர்சனங்களை சந்திக்க நேர்ந்தாலும், தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அந்த அவமானத்தையும் ஏற்கத் தயாராக இருந்தேன் என்று அவர் தெரிவித்தார்.

குறுவை சாகுபடி நிவாரணம் குறித்து விளக்கம்

குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கப்படவில்லை என்ற எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கும் முதல்வர் பதிலளித்தார்.

தேவையான நிதி உதவிகளை அரசு ஏற்கனவே அறிவித்து வழங்கியுள்ளதாக அவர் கூறினார். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அரசின் நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments