HomeTamilnaduகருணாநிதியின் நினைவு நாள் : காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் மரியாதை

கருணாநிதியின் நினைவு நாள் : காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் மரியாதை

காட்பாடி தெற்கு பகுதி திமுக சார்பில் முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு, காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகிலுள்ள அண்ணா சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு, தெற்கு பகுதி செயலாளரும் வேலூர் மாநகராட்சி துணை மேயருமான எம். சுனில்குமார் தலைமை தாங்கி மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சிக்கு காட்பாடி வடக்கு பகுதி செயலாளர் வன்னியராஜா, காட்பாடி ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் துரைசிங்காரம், மாவட்ட பொருளாளர் நரசிம்மன், பொதுக்குழு உறுப்பினர் தயாநிதி, மாநகர துணைச் செயலாளர் தேவநேசன், வட்ட செயலாளர்கள் சசிகுமார், சம்பந்தம், அரிகிருஷ்ணன், ராஜி, மாநகராட்சி கவுன்சிலர்கள் ரஜினி, டீடா சரவணன் மற்றும் அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் டீக்காராமன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தோழர்கள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments