HomeIndiaகுஜராத்தில் தானாக அசையும் மர்ம கிணறு ; விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

குஜராத்தில் தானாக அசையும் மர்ம கிணறு ; விஞ்ஞானிகள் சொல்வது என்ன?

குஜராத் மாநிலத்தின் மோர்பி மாவட்டத்தில் உள்ள ஒரு கிணறு கடந்த சில நாட்களாக தொடர்ந்து தானாகவே அலைகளை உருவாக்கி வருவது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

இந்த நிகழ்வுக்கு பின்னால் அமானுஷ்ய காரணம் எதுவும் இல்லை என்றும், இது இயற்கை காரணங்களால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

குஜராத் மாநிலம், மோர்பி தாலுகாவில் உள்ள விர்பர்டா கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 18 அடி ஆழமுள்ள கிணறு ஒன்று உள்ளது. இது சில நேரங்களில் அலைகளின் வேகம் அதிகரித்து, கிணற்றின் விளிம்பைத் தாண்டி தண்ணீர் வெளியேறும் அளவிற்கும் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வுக்கு நிலநடுக்கம் காரணமாக இருக்கலாம் என மக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது. ஆனால், மாவட்ட புவியியல் அதிகாரிகள் இந்த கருத்தை மறுத்துள்ளனர். சமீபத்தில் பெய்த கனமழையால் நிலத்தடி நீர் அதிகரித்திருக்கலாம்.

அதன் காரணமாக, நிலத்தடியில் உள்ள பாறைகளின் சிறிய இடைவெளிகளில் சிக்கியிருந்த காற்று வெளியேறும்போது, அந்த அழுத்தம் கிணற்றுக்குள் நீரை தொடர்ந்து அசையச் செய்து அலைகளை உருவாக்கியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

இது ஆரம்பகட்ட மதிப்பீடு மட்டுமே என்றும், முழுமையான ஆய்வுக்குப் பிறகே இறுதி காரணம் உறுதி செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments