HomeIndiaபள்ளி விடுதிக்குள் புகுந்த பாம்பு: 6 மாணவிகளை கடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

பள்ளி விடுதிக்குள் புகுந்த பாம்பு: 6 மாணவிகளை கடித்ததில் 3 பேர் உயிரிழப்பு

மகாராஷ்டிரா மாநிலம், கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் பழங்குடியினர் உறைவிடப் பள்ளியின் விடுதியில் புகுந்த பாம்பு ஒன்று 6 மாணவிகளை கடித்தது. இதில் 3 மாணவிகள் உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவம் மாணவிகளின் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பழங்குடியினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள் தங்கியிருந்த விடுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதால், பள்ளியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும் கேள்விகள் எழுந்துள்ளன. பாம்பு கடித்த மற்ற 3 மாணவிகளின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் அவிஷ்யந்த் பாண்டா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். விடுதிக்குள் பாம்பு எப்படி நுழைந்தது, மாணவிகள் தங்கியிருந்த இடத்தில் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தனவா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட உள்ளது.

கட்சிரோலி சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள பிற உறைவிடப் பள்ளிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாரிகள் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments