தேர்வின்போது ChatGPT பயன்படுத்தியதாக பிடிபட்ட ஐஐடி மாணவர் உயிரிழப்பு

மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் வளாகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தார். அதற்கு முன்னதாக நடைபெற்ற தேர்வின்போது அந்த மாணவர் தேர்வுக் கேள்வித்தாளை ChatGPT-ல் பதிவேற்றி விடைகளை பெற முயன்றதாகவும் ஐஐடி மும்பை தெரிவித்துள்ளது.

ஐஐடி மும்பை வெளியிட்ட தகவலின்படி, இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவர் ஒருவர் தேர்வின்போது செல்போன் பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. அவர் தேர்வுக் கேள்வித்தாளை தனது செல்போன் மூலம் ChatGPT-ல் பதிவேற்றி, அதற்கான விடைகளை பெற முயன்றதாக தெரிவித்துள்ளது. மேலும், மாணவர் மீது எந்தவிதமான ஒழுங்கு நடவடிக்கையும் தொடங்கப்படவில்லை என்பது ஐஐடி மும்பை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : காணாமல் போன முதியவர்: ChatGPT மூலம் குடும்பத்தை கண்டுபிடித்த இளைஞர்

இதையடுத்து, அதே நாள் மாலை அவர் விடுதி அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்துக்கான காரணங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாணவரின் மரணத்தை தொடர்ந்து ஐஐடி மும்பை வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடைபெற்ற இடத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மாணவரின் மரணத்திற்கு ஐஐடி பாம்பே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது. அவரது நண்பர்கள், வகுப்புத் தோழர்கள், ஆசிரியர்கள் மற்றும் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாக நிறுவனம் கூறியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதால், மாணவரின் மரணத்திற்கான முழுமையான காரணங்கள் வெளியாகும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial