AI துறையில் இந்தியாவுக்கு புதிய வலிமை.. ஹைதராபாத்தில் மைக்ரோசாப்ட் பிரம்மாண்ட திட்டம்

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களுக்கான கட்டமைப்பை மேலும் விரிவுபடுத்தும் வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் ஹைதராபாத்தில் புதிய கிளவுட் தரவு மையத்தை கொண்டுவந்துள்ளது. இது இந்தியாவில் மைக்ரோசாப்ட்டின் 4-வது தரவு மையமாகும்.

இந்தியாவில் உள்ள மைக்ரோசாப்ட் தரவு மையப் பகுதிகள் AI சார்ந்த பணிச்சுமைகளை கையாளும் வகையில் தேவையான வன்பொருள் மற்றும் கட்டமைப்புகளுடன் தயாராக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. 20.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தியா சவுத் சென்ட்ரல் மையம் ஹைதராபாத்தில் அமைந்துள்ளது. இதில் முக்கியமான தரவுகள் மற்றும் AI சார்ந்த பணிகளை தொடர்ந்து இயக்குவதற்கான கட்டமைப்பு வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. மேலும் Azure மற்றும் AI சேவைகள் படிப்படியாக இந்த மையத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

பாதுகாப்பு, தரவு இருப்பிடம் மற்றும் விதிமுறை சார்ந்த தேவைகளை கருத்தில் கொண்டு, இந்தியாவிலேயே தங்களது குறிப்பிட்ட தரவு மற்றும் AI பணிகளை மேற்கொள்ள நிறுவனங்களுக்கு இது கூடுதல் வாய்ப்பை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் மைக்ரோசாப்ட் அறிவித்துள்ள 20.5 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த புதிய தரவு மையம் அமைந்துள்ளது. இந்தியாவில் மைக்ரோசாப்ட்டின் கிளவுட் கட்டமைப்பை விரிவுபடுத்துவதுடன், AI பயன்பாடுகளை அதிக அளவில் இயக்குவதற்கான அடித்தளத்தையும் இது உருவாக்கும் என நிறுவனம் கூறியுள்ளது.

தரவு மையங்களில் கணினி உபகரணங்களின் வெப்பநிலையை கட்டுப்படுத்த அதிக அளவு தண்ணீர் பயன்படுத்தப்படும். ஆனால், தற்போது தண்ணீர் இல்லாமல் குளிரூட்டலுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது.

அதிவேக இணைய இணையதள வசதிக்காக கடலடி கேபிள் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 3,600 கி.மீ. நீளமுள்ள இந்த கேபிள் இந்தியா, மலேசியா மற்றும் சிங்கப்பூரை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கேபிள் 2029-ம் ஆண்டில் பயன்பாட்டுக்கு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எதிர்காலத்தில் மின்சாரம், தண்ணீருக்கு ஆபத்து? 80s AI போட்டோவிற்கு பின்னால் இருக்கும் அதிர்ச்சி தகவல்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial