இடைத்தேர்தலுக்குப் பிறகு பாமக, தவெக தலைமையிலான கூட்டணியில் இணையலாம் என்றும், பாமக சட்டப்பேரவை குழுத் தலைவர் சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என தகவல் பரவி வருகிறது. இதனிடையே, விசிக தலைவர் திருமாவளவன், இந்த வதந்திகளின் பின்னணியில் தங்கள் கட்சியின் ஆதரவு வாக்குகளை பாதிக்கும் முயற்சி இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருமாவளவன் கூறியது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக திருமாவளவன் சமூக வலைதள நேரலையில் விளக்கம் அளித்தார். அதில், தவெக கூட்டணியில் பாமக இணையப்போகிறது என்ற தகவல் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. பாஜக மற்றும் பாமக இடம்பெறும் அணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது. தவெக கூட்டணியில் பாமக இணையப்போகிறது என்ற செய்தி பரவுவதன் மூலம் விசிக தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த முடியும் என்று சிலர் கணக்கு போடுகின்றனர் என அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் வன்னியரசு விளக்கம்
இது குறித்து விசிகவை சேர்ந்த அமைச்சர் வன்னியரசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது, “சாதியவாத பாமகவோடும், மதவாத பாஜகவோடும் கூட்டணி வைக்க மாட்டோம் என்று 10 ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் தலைவர் திருமாவளவன் அறிவித்துவிட்டார் என கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அதிமுகவில் அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைவர்கள்.. இந்த ஆண்டில் மட்டுமே இத்தனை பேரா?
சௌமியா அன்புமணி மறுப்பு
இதற்கிடையே, தவெக கூட்டணியில் பாமக இணையப்போகிறது என்றும், சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்றும் வெளியான தகவல்களை சௌமியா அன்புமணி ஏற்கெனவே மறுத்துள்ளார்.
அமைச்சர் ராஜ்மோகனின் பதில் என்ன?
வெக கூட்டணியில் பாமக இணையுமா என்று அமைச்சர் ராஜ்மோகனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், கூட்டணியில் புதிய கட்சி சேருவது தொடர்பான முடிவு முதலமைச்சர் விஜய் மற்றும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்களுடன் ஆலோசித்த பிறகே எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : உலகமே கொண்டாடும் இந்திய விமானி : யார் இந்த ஸ்மித் மச்சார்! நடுவானில் நடந்தது என்ன?

