அதிமுகவில் அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைவர்கள்.. இந்த ஆண்டில் மட்டுமே இத்தனை பேரா?

தமிழகத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்ற தேர்தலில் தவெக தனித்து போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றது. ஆட்சி அமைக்க பெருபான்மை இல்லாததால் காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட், IUML கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.

சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக அரசியலில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் நடந்து வருகின்றன. திமுக கூட்டணியில் இருந்த, காங்கிரஸ், மதிமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகள் தற்போது, தவெக கூட்டணியில் இணைந்துள்ளது. இன்னொருபுறம், அதிமுகவில் இருந்து பல முக்கிய நபர்கள் அக்கட்சியில் இருந்து விலகி, தவெக வில் இணைந்து வருகின்றனர். இது அந்த கட்சிக்கு கடும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சூழலில், முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. மூத்த தலைவருமான செம்மலை த.வெ.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அவருக்கு முதலமைச்சர் விஜய், த.வெ.க.வின் கட்சித் துண்டை அணிவித்து வரவேற்றார்.

யார் இந்த செம்மலை?

செம்மலை கடந்த 1980, 1984-ம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். அதன்பிறகு கடந்த 2001-ம் ஆண்டு ஓமலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார். 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த மே மாதம் அக்கட்சியில் இருந்து விலகிய செம்மலை தற்போது தவெகவில் இணைந்துள்ளார்.

அடுத்தடுத்து விலகும் முக்கிய தலைவர்கள்

2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவைச் சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகியுள்ளனர். மதுராந்தகம், பெருந்துறை, தாராபுரம் தொகுதிகளைச் சேர்ந்த அதிமுக எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகியோர் மே மாதத்தில் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.

இது தவிர, எம்.சி. சம்பத், கடம்பூர் சி. ராஜு, உடுமலை கே. ராதாகிருஷ்ணன் வெல்லமண்டி என். நடராஜன், எம்.ஆர். சிவபதி, எம்.எஸ்.எம். ஆனந்தன், எஸ். வளர்மதி, வைகைச்செல்வன், கே.வி. ராமலிங்கம், கே.டி. பச்சைமால், எம். ஆனந்தன் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் பலரும் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்துள்ளனர்.

ஜூன் 7 அன்று மட்டும் எம்.சி. சம்பத், கடம்பூர் ராஜு, உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர். சிவபதி உள்ளிட்ட 4 முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி ஏ. இளவரசன் மற்றும் 7 முன்னாள் எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் தவெகவில் இணைந்துள்ளனர்.

இதையும் படிங்க : அக்டோபர் 1 முதல் அதிரடி மாற்றம்: வணிக சிலிண்டர் விலை உயர்வு; SBI ATM கட்டணமும் மாறியது

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial