2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மதுராந்தகம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த சத்யபாமாவும் தங்களது எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதனால் இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. வாக்குப்பதிவு அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. அக்டோபர் 9-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது
இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என அரசியல் கட்சிகள் தீவிர வாகு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைவர் மு.க ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் விஜய் குறித்து பேசி வருகின்றனர்.
“என் வீட்டில் 3 மணி நேரம் உட்கார்ந்திருந்தவர் விஜய்” – எடப்பாடி பழனிசாமி
தாராபுரம் இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் பானுமதியை ஆதரித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; “நான் இதுவரை இந்த விவகாரத்தை வெளியே சொன்னதில்லை. ஆனால், தவெக கட்சித் தலைவர் அதிமுகவைப் பார்த்து ‘மற்றும்பலர்’ என அழுத்தி சொல்வதால் தற்போது அதனை சொல்கிறேன்.
நான் முதலமைச்சராக இருந்தபோது, அவருடைய படம் வெளியீடு தொடர்பாக என் வீட்டில் 3 மணி நேரம் உட்காந்திருந்தார். நான் சரி செய்து விடுகிறேன் என சொன்னபோது, இல்லை நீங்க முடித்துக்கொடுங்கள். அப்போதுதான் இங்கிருந்து செல்வேன் என அவர் கூறியதாக எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
Reels CMக்கு பயம்” – தாராபுரத்தில் ஸ்டாலின் அதிரடி
தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்தப் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், பேசியதாவது : முதலமைச்சர் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டு, மக்கள் முன் நடித்துவருகிறார். சமீபத்தில் பிரச்சாரத்தில் வேட்பாளரையும் நடிகராக மாற்றிக்கொண்டிருக்கிறார். பிரச்சார மேடையில் மைக் கிடைத்தால் போதுமென தான் மனப்பாடம் செய்ததை கத்துகிறார்.
மேடையிலும், சட்டமன்றத்தில் கத்துகிறீர்களே, மீடியா மைக் முன்னாடி கொஞ்சம் பேசக்கூடாதா? உங்களிடம் கூலிங் கிளாஸ் வாங்கிய பாட்டி கூட தைரியமாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். ஆனால், இந்த ரீல்ஸ் சி.எம். மட்டும் மீடியா என்றாலே அஞ்சுகிறார்.
நானும் கத்துகிறேன், ‘சி.எம் சார்… ப்ரோ…. தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரத்தில் ஏன் சார் வாயைத் திறக்கவில்லை. என்ன சார் பயம்? பாஜக என்றால் அவ்வளவு பயமா சி.எம். சார்? என அவர் பேசியுள்ளார்.
இதையும் படிங்க : ஓடும் ரயிலில் பாம்புகளை காட்டி பணம் பறித்த 6 பேர் கைது

