ஓடும் ரயிலில் பாம்புகளை காட்டி பணம் பறித்த 6 பேர் கைது

பீகாரில் ஓடும் ரயிலில், பயணிகளிடம் பாம்புகளை காட்டி பணம் பறித்த 6 பேரை ரயில்வே பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து பாம்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பீகார் மாநிலத்தில் இயக்கப்படும் ஜனசேவா எக்ஸ்பிரஸ் ரயில், சாப்ரா ரயில் நிலையத்தை கடந்து சென்ற போது, அங்கு வந்த சிலர், பயணிகளிடம் பாம்பை காட்டி பணம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் ரயில்வே பாதுகாப்புப் படையிடம் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக 6 பேரை கைது செய்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்த பாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட பாம்புகளை வனத்துறை வசம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணையின்போது, பிடிபட்டவர்கள் தங்களுடைய பெயர் மற்றும் முகவரி குறித்து ஒரே மாதிரியான தகவல்களை வழங்கவில்லை என்றும், லக்னோ மற்றும் இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்ததாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial