மகாத்மா காந்தியின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. நேற்று நாடு முழுவதும் அவரது 157வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், காந்தி ஜெயந்திக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் தொழிலாளர் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வில் 45 நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காதது தெரியவந்தது.
இது குறித்து விளக்கம் கேட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதே போல, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் காந்தி ஜெயந்தியன்று தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காத 63 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காந்தி ஜெயந்தியன்று சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாத 26 கடைகள், 37 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 63 நிறுவனங்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது என தருமபுரி மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : ஓடும் ரயிலில் பாம்புகளை காட்டி பணம் பறித்த 6 பேர் கைது

