மேகாலயா மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், மாநிலத்தின் பல பகுதிகளில் மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஷில்லாங் பகுதியில் சுமார் 60 சதவீதத்துக்கும் அதிகமான மழைப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதற்கு எல் நினோ தாக்குதல் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. மேகாலயா பொதுவாக அதிக மழைப்பொழிவு பெறும் மாநிலங்களில் ஒன்றாகும். குறிப்பாக கிழக்கு காசி மலைப்பகுதியில் உள்ள மாசின்ராம் மற்றும் சோஹ்ரா போன்ற இடங்களில் அதிகளவில் மழை பெய்யும் பகுதியாகும். ஆனால் இந்த ஆண்டு நிலைமை மாறியுள்ளது.
மழைப் பற்றாக்குறை காரணமாக குடிநீர், விவசாயம் பாதிக்கும் வாய்ப்பு இருப்பதால், மாநில அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வழக்கத்தைவிட முன்கூட்டியே மழை பெய்துள்ளது. இதனால் மழை குறைந்திருந்தாலும், அதன் தாக்கத்தை ஓரளவு கட்டுப்படுத்த முடிந்ததாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : ரஷ்யாவில் பிளேக் நோயால் ஒருவர் மரணம் : சோதனைக் குழாய் உடைந்து வைரஸ் பரவியதா?

