ரஷ்யாவில் பிளேக் நோயால் ஒருவர் மரணம் : சோதனைக் குழாய் உடைந்து வைரஸ் பரவியதா?

ரஷ்யாவின் சைபீரியா பகுதியில் பிளேக் நோய் தொடர்பான ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயது பெண் ஆய்வக ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவரது மரணத்துக்கு பிளேக் நோய் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் தொடர்பில் இருந்த சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

யார் அந்த பெண்?

சைபீரியாவின் இர்குட்ஸ்க் பகுதியில் செயல்பட்டு வரும் பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் தார்யா ஷிபிலோவா என்ற 28 வயது ஆய்வக தொழில்நுட்ப பணியில் பணியாற்றி வந்துள்ளார். செப்டம்பர் 29-ம் தேதி அவர் கடுமையான நிமோனியா போன்ற அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அக்டோபர் 2-ம் தேதி அவர் உயிரிழந்தார்.

சோதனைக் குழாய் உடைந்ததா?

இந்த சம்பவத்தை தொடர்ந்து பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ளன. ஆய்வகத்தில் பணியாற்றியபோது உயிருள்ள பாக்டீரியா இருந்ததாகக் கூறப்படும் சோதனைக் குழாய் உடைந்ததாகவும் அதனால் அவர் பிளேக் கிருமியால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

கண்காணிப்பில் 200 பேர்

அந்த பெண் ஊழியருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு ஏதேனும் தொற்று பரவியிருக்கிறதா என்பதை கண்டறிவதற்காக சுமார் 200 பேர் மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு இதுவரை நோய் அறிகுறிகள் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களிடம் தொடர்ந்து மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிளேக் நோய் என்றால் என்ன?

பிளேக் நோய் என்பது யெர்சினியா பெஸ்டிஸ் என்ற பாக்டீரியாவால் ஏற்படும் தொற்று நோயாகும். பொதுவாக சிறிய பாலூட்டிகள் மற்றும் அவற்றின் உடலில் காணப்படும் உண்ணிகள் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடும்.

இதில் நுரையீரலை பாதிக்கும். இந்த வகை தொற்று ஏற்பட்டால் இருமல், காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் நிமோனியா போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். நுரையீரல் பிளேக் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு இருமல் அல்லது தும்மல் ஏற்படும் போது வெளியேறும் சுவாசத் துளிகள் மூலம் மற்றவர்களுக்கும் பரவக்கூடும்.

உலக சுகாதார அமைப்பு கூறுவது என்ன?

இந்த சம்பவத்தை உலக சுகாதார அமைப்பும் கண்காணித்து வருகிறது. பிளேக் பரவலுக்கான ஆபத்து மிகவும் குறைவு என்றாலும், ரஷ்யாவிலும் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial