புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் விநாயகமும், திமுக சார்பில் சேது செல்வமும் போட்டியிட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பிற கட்சிகள் என 11 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர்.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் என்.ஆர்.காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அசோக் ஆனந்த் 13,350 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் 2-வது இடத்திலும், தி.மு.க. வேட்பாளர் சேது செல்வம் 3-வது இடத்திலும் உள்ளனர்.
தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர். காங்கிரசுக்கு எதிராக போட்டியிட்ட திமுக, நாம் தமிழர், கம்யூனிஸ்ட் கட்சிகள் டெபாசிட் இழந்துள்ளன.
தாராபுரம் இடைத்தேர்தல்: 6-வது சுற்றில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை

