தாராபுரம் இடைத்தேர்தல்: 6-வது சுற்றில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், ஆறாவது சுற்று முடிவில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் பானுமதி இரண்டாவது இடத்திலும், திமுக வேட்பாளர் சுகன்யா மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

ஆறாவது சுற்று முடிவில் தவெக வேட்பாளர் சத்யபாமா 16,201 வாக்குகள் பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் பானுமதி 14,807 வாக்குகள் பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சுகன்யா 13,797 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார்.

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலையில் இருந்த நிலையில், தற்போது தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலையில் உள்ளார்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial