அதிமுகவின் 6 எம்எல்ஏக்கள் ராஜினாமா செல்லும்! சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

அதிமுகவைச் சேர்ந்த 6 எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டது செல்லும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எம்எல்ஏக்களின் ராஜினாமாவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக வெற்றி பெற்ற எம்.ஆர். விஜயபாஸ்கர், சி. விஜயபாஸ்கர், பெருந்துறை ஜெயக்குமார், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 பேர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களில் மரகதம் குமரவேல், சத்தியபாமா ஆகியோர் தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்று மீண்டும் சட்டப்பேரவை உறுப்பினர்களாகப் பொறுப்பேற்றுள்ளனர்.

அதிமுகவை சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதங்களைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். இதனை, எதிர்த்து அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகள் தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளைத் தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை அறிவித்தனர்.

அதில், ஆறு அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவைச் சபாநாயகர் ஏற்றுக்கொண்டது சட்டப்படி செல்லும் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில், அந்த ஆறு பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை குறித்து இரண்டு மாதங்களுக்குள் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க : எல் நினோவின் தாக்கம் 2027 வரை நீடிக்கும் : உலக வானிலை மையம் தகவல்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial