எல் நினோவின் தாக்கம் 2027 வரை நீடிக்கும் : உலக வானிலை மையம் தகவல்

பசிபிக் பெருங்கடலில் வலுப்பெற்று வரும் எல் நினோ டிசம்பர் மாதத்தில் உச்சத்தை எட்டக்கூடும் என்று உலக வானிலை அமைப்பு எச்சரித்துள்ளது. இதன் காரணமாக உலகின் பல பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக வெப்பநிலை இருக்கும் என கூறியுள்ளார்.

உலக வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பசிபிக் பெருங்கடலின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரிக்கும். 2026 ஜூன் மாதத்தில் 1.6 டிகிரி செல்சியஸாகவும், ஆகஸ்ட் மாதத்தில் 2.5 டிகிரி செல்சியஸாகவும் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், இந்த வெப்பநிலை வேறுபாடு சராசரியாக 3.7 டிகிரி செல்சியஸை எட்டக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தக் கணிப்பு உறுதியானால், 2015–2016 காலகட்டத்தில் பதிவான 2.6 டிகிரி செல்சியஸ் என்ற முந்தைய உச்சத்தைவிட அதிகமாக இருக்கும்.

இந்த நிகழ்வு 2027 பிப்ரவரி மாதம் வரையிலும் நீடிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. எல் நினோ காரணமாக உலகின் பல்வேறு இடங்களில் வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவு இருக்கும் என உலக வானிலை தெரிவித்துள்ளது.

எல் நினோவால் என்ன பாதிப்பு?

மழை குறைந்தால் நெல், தானியங்கள் மற்றும் பிற பயிர்களின் உற்பத்தி பாதிக்கப்படலாம். இதனால் விவசாயிகளின் வருமானம் குறைவதுடன், சில உணவுப் பொருட்களின் சந்தை வரத்தும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

எல் நினோவின் தாக்கத்தால் உலகின் பல பகுதிகளில் சராசரி வெப்பநிலை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏற்கெனவே அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் பகுதிகளில் வெப்ப அலைகளின் அபாயமும் அதிகரிக்கும்.

எல் நினோ வலுப்பெறும்போது சில நாடுகளில் மழை குறைந்து வறட்சி ஏற்படலாம். மற்ற பகுதிகளில் வழக்கத்தைவிட அதிக மழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்படலாம்.

இதையும் படிங்க : 2100-ம் ஆண்டுக்குள் மனிதகுலம் அழியும் – ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial