பொறியாளர்களுக்கு ஏ.ஐ பயிற்சி! ரூ.900 கோடி முதலீடு செய்யும் ஆந்த்ரோபிக்

ஏ.ஐ தொழில்நுட்பத்தை வணிக நிறுவனங்கள் திறம்படப் பயன்படுத்த உதவும் வகையில், 10,000 பொறியாளர்களுக்குப் பயிற்சி அளிக்க ஆந்த்ரோபிக் நிறுவனம் 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ஆந்த்ரோபிக், தனது கிளாட் (Claude) செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை வணிக நிறுவனங்கள் அதிக அளவில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பல நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவுக் கருவிகளை வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. ஆனால், அவற்றைத் தங்களது பணிச்சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைப்பதிலும், ஏற்கெனவே உள்ள செயல்முறைகளுடன் இணைப்பதிலும் சிக்கல்களை எதிர்கொள்கின்றன.

இந்த சிக்கலை தீர்க்க பொறியாளர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கும் திட்டத்தில் 100 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.900 கோடி) முதலீடு செய்ய ஆந்த்ரோபிக் முடிவு செய்துள்ளது. நியூயார்க் மற்றும் சான் பிரான்சிஸ்கோ நகரங்களில் முதல் கட்டப் பயிற்சிகள் தொடங்கியுள்ளன.

இதில், ஆக்சென்ச்சர், பெயின் மற்றும் நோவோ நோர்டிஸ்க் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் முதல் பயிற்சிக் குழுக்களில் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் பொறியாளர்களுக்கு முதலில் நான்கு நாள் நேரடிப் பயிற்சி வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க : 2100-ம் ஆண்டுக்குள் மனிதகுலம் அழியும் – ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial