உலகின் மிக மோசமான காற்று மாசுபாடு கொண்ட 25 நகரங்கள்! இந்தியாவில் மட்டும் 22 நகரங்கள்

உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட 25 நகரங்களின் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 22 நகரங்கள் இடம்பெற்றுள்ளன. AQI.in வெளியிட்ட 2026 அக்டோபர் 24-ம் தேதி காலை 11 மணி நேர நிலவரத்தின்படி, உலகின் மிக மோசமான காற்றுத் தரம் கொண்ட நகரங்களின் பட்டியலில் இந்திய நகரங்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன.

முதல் 10 இடங்களில் மீரட், காசியாபாத், பானிபட், நொய்டா, கிரேட்டர் நொய்டா, ஹாபூர், முசாபர்நகர், மொராதாபாத், சோனிபட், கர்னால் உள்ளிட்ட நகரங்களும் அதிக மாசுபாடு கொண்ட பகுதிகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவின் பிவாண்டி, தானே, பஞ்சாபின் பதிண்டா, ஃபரித்கோட் மற்றும் ராஜஸ்தானின் ஸ்ரீ கங்காநகர் ஆகிய நகரங்களிலும் காற்றின் தரம் மோசமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

உலகின் அதிக மாசுபாடு கொண்ட 25 நகரங்களின் பட்டியலில் டெல்லி இடம்பெறவில்லை. ஏனென்றால், டெல்லியின் காற்றுத் தரக் குறியீட்டில் சிறிய முன்னேற்றம் ஏற்பட்டது. அக்டோபர் 23-ம் தேதி காலை 9.31 மணிக்கு 337 ஆக இருந்த டெல்லியின் காற்றுத் தரக் குறியீடு, அக்டோபர் 24-ம் தேதி அதே நேரத்தில் 296 ஆகக் குறைந்தது.

இதையும் படிங்க : புகைமூட்டத்தால் உடலுக்கு இவ்வளவு பாதிப்பா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்..!

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});