புகைமூட்டத்தால் உடலுக்கு இவ்வளவு பாதிப்பா? இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்..!

குளிர்காலம் மற்றும் காற்று மாசுபாடு அதிகரிக்கும் காலங்களில் சாலைகளில் புகைமூட்டம் காணப்படுவது வழக்கம். இதனால் சுவாசப் பிரச்சனைகள் ஏற்படலாம். காற்றில் கலந்திருக்கும் தூசித் துகள்கள் கண்களையும் பாதிக்கக்கூடும்.

புகைமூட்டம் என்பது புகை, தூசித் துகள்கள் மற்றும் பல்வேறு காற்று மாசுபடுத்தும் பொருட்கள் கலந்து காற்றில் உருவாகும் மாசு நிறைந்த படலமாகும். வாகனப் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் வாயுக்கள், கட்டுமானப் பணிகளால் எழும் தூசி, குப்பைகளை எரித்தல் உள்ளிட்டவைகளால் காற்று மாசு அதிகரிக்கும்.

புகைமூட்டம் எப்படி பாதிக்கிறது?

கண்களைப் பாதுகாக்க இயற்கையாகவே கண்ணீர் உதவுகிறது. ஆனால், மாசுபட்ட காற்று காரணமாக, கண்களில் எரிச்சல், சிவந்து போதல், நீர் வடிதல், அரிப்பு, வறட்சி போன்ற அறிகுறிகள் ஏற்படும். ஏற்கெனவே கண் ஒவ்வாமை அல்லது கண் வறட்சி பிரச்சனை இருப்பவர்களுக்கு பிரச்சனை இன்னும் தீவிரமாக இருக்கும்.

புகைமூட்டத்தில் உள்ள நுண்ணிய துகள்கள் நுரையீரலின் ஆழமான பகுதிகளுக்கு சென்று பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக, இருமல், தொண்டை எரிச்சல், மூச்சுத்திணறல், மூச்சு விடும்போது சத்தம் ஏற்படுதல் போன்ற பாதிப்புகள் வரலாம். ஏற்கெனவே ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் அதிகரிக்கலாம்.

புகைமூட்டத்திலிருந்து பாதுகாப்பது எப்படி?

உங்கள் பகுதியில் காற்றின் தரம் எப்படி உள்ளது என்பதை கவனிக்க வேண்டும். காற்றின் தரம் மோசமாக இருந்தால் தேவையில்லாமல் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் இடங்களுக்குச் செல்லும்போது முகத்திற்குச் சரியாகப் பொருந்தும் N95 முகக்கவசத்தைப் பயன்படுத்தலாம்.

காற்று மிகவும் மோசமாக இருக்கும்போது வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கலாம். புகைமூட்டம் அதிகமாக இருக்கும்போது கண்களில் எரிச்சல், அரிப்பு ஏற்பட்டால் கண்களை தேய்க்காமல் உடனடியாகக் கண் மருத்துவரை அணுகவும்.

வீட்டிற்குள் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும். குப்பைகள், இலைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிக்க வேண்டாம். காற்று மாசுபாடு அதிகமாக இருக்கும் நாட்களில் குழந்தைகள் நீண்ட நேரம் வெளியே விளையாடுவதைக் குறைக்கவும். முதியவர்கள் மற்றும் சுவாச நோய் உள்ளவர்கள் மருத்துவர் கூறிய மருந்துகளைத் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். இது போன்ற நடவடிக்கைகள் பாதிப்பைக் குறைக்க உதவும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});