பல ஆண்டுகள் பயணித்த பேருந்துக்கு ஒரு கடைசி முத்தம் : கேரள ஓட்டுநர் செய்த நெகிழ்ச்சி செயல்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனாவைச் சேர்ந்தவர் பால் குரியன். இவர் கேரள மாநில போக்குவரத்துக் கழகத்தில் பல ஆண்டுகளாக ஓட்டுநராக பணியாற்றி வந்தார். பணியின் இறுதி நாளில் தனது கடைசி பயணத்தை முடித்த பால் குரியன், பேருந்தில் இருந்து கீழே இறங்கினார். பின்னர் நேராக பேருந்தின் முன்பகுதிக்கு சென்றார்.

அங்கு பேருந்தை கட்டியணைத்த அவர், அதற்கு முத்தமிட்டார். தொடர்ந்து மீண்டும் பேருந்துக்குள் ஏறி, தனது ஓட்டுநர் இருக்கையில் கடைசி முறையாக அமர்ந்தார். பேருந்தில் இருந்து இறங்கி இறுதியாக அங்கிருந்து புறப்படுவதற்கு முன்பு, அதன் முன்புறம் மற்றும் பின்புறத்தில் உள்ள டயர்களை பால் குரியன் தனது கைகளால் தொட்டார். பின்னர் அந்தப் பேருந்தை நோக்கி தலைவணங்கினார்.

பல ஆண்டுகளாக தனது பணியிடமாகவும், அன்றாட வாழ்க்கையின் முக்கிய அங்கமாகவும் இருந்த பேருந்துடன் பிரிவதற்கு முன்பு அவர் செலவிட்ட இந்த சில நிமிடங்கள் அங்கிருந்தவர்களின் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகின்றன. பலரும் ஓட்டுநருக்கும் அவர் பணியாற்றிய பேருந்துக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான உறவை பாராட்டி வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial