தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளர் தேவா கடந்த 17ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருடைய திடீர் மறைவு திரை உலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அவரது மறைவுக்கு திரை உலகினர் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
நடிகர் கார்த்திக் சபேஷ் காலமானார்
இசையமைப்பாளர் தேவாவின் சகோதரர் சபேஷின் மகனான கார்த்திக் சபேஷ், தமிழ்த் திரைப்படங்களில் துணை நடிகராகப் பணியாற்றி வந்தார். 37 வயதான இவர், உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மோசமடைந்ததால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அக்டோபர் 20ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
கார்த்திக் சபேஷ் பல தமிழ்த் திரைப்படங்களில் சிறிய மற்றும் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். குளிர் 100, வல்லவன், பட்டத்து யானை, உதயம் என்.எச்.4 உள்ளிட்ட படங்களில் அவர் நடித்துள்ளார்.
தேவா குடும்பத்தில் மீண்டும் ஒரு சோகம்
தமிழ் திரையுலகில் தேவா புகழ்பெற்ற இசையமைப்பாளராக விளங்கினார். அவரது சகோதரர் சபேஷும் இசையமைப்பாளராக பணியாற்றினார். சபேஷ் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காலமானார். இதற்கிடையில், கடந்த அக்டோபர் 17ஆம் தேதி இசையமைப்பாளர் தேவா உயிரிழந்தார். தேவாவின் மறைவால் குடும்பத்தினர் சோகத்தில் இருந்த நிலையில், சில நாட்களிலேயே கார்த்திக் சபேஷும் உயிரிழந்துள்ளது குடும்பத்தில் மேலும் ஒரு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

