நடிகர் சிவா நடித்த ‘தமிழ் படம்’ கடந்த 2010ம் ஆண்டில் வெளிவந்தது. சி. எஸ். அமுதன் அமுதன் இயக்கிய இப்படத்தில் திஷா பாண்டே, எம்.எஸ் பாஸ்கர், மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் உள்ள முக்கிய காட்சிகளை கலாய்க்கும் விதமாக எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து ‘தமிழ் படம் 2’ கடந்த 2018ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதில், ஐஸ்வர்யா மேனன், சதீஸ், நிழல்கள் ரவி உள்ளிட்டோர் நடித்தனர். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இரண்டு பாகங்களும் நல்ல வரவேற்பை பெற்றதால் 3 வது பாகம் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
இந்நிலையில், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவாவிடம் ‘தமிழ் படம் 3’ குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் படப்பிடிப்பைத் தொடங்கத் தயாராக உள்ளோம். அனைத்தும் தயார் நிலையில் உள்ளது” என நடிகர் சிவா தெரிவித்தார்.
இதனால் ‘தமிழ் படம் 3′ குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வெளிவந்தால் எந்தெந்த படங்களை கலாய்த்து எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

