ஏ.ஐ காரணமாக வேலைவாய்ப்புகளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் குறித்து கலிபோர்னியா ஏற்கெனவே நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், செயற்கை நுண்ணறிவு பயன்பாடு காரணமாக பணியாளர்கள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசம் செப்டம்பர் 30, 2026 அன்று பணியிடங்களில் ஏ.ஐ-யை பயன்படுத்துவதற்கு புதிய கட்டுப்பாடுகளை கொண்டுவரும் சட்டங்களில் கையெழுத்திட்டார்
புதிய சட்டத்தின் முக்கிய நோக்கம் என்ன?
ஒரு பணியாளரை பணிநீக்கம் செய்வது அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பது போன்ற முக்கிய முடிவுகளை ஏ.ஐ-யை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நிறுவனங்கள் எடுக்க கூடாது. அந்த முடிவை எடுக்க அதிகாரி ஒருவர் கூடுதல் தகவல்களுடன் சரிபார்க்க வேண்டும்.
பணிநீக்கம் அல்லது ஒழுங்கு நடவடிக்கையில் ஏ.ஐ பயன்படுத்தப்பட்டிருந்தால், அது குறித்து சம்பந்தப்பட்ட பணியாளருக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
ஏ.ஐ பயன்பாடு அதிகரித்து வரும் சூழலில், அது ஒரு கருவியாக மட்டும் தான் இருக்க வேண்டும்; பணியாளர்களின் வாழ்க்கையை மாற்றக்கூடிய முடிவுகளை அது தனியாக எடுக்கக் கூடாது என்ற அடிப்படையில் இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

