மதுராந்தகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த தவெக? வீடியோவால் சர்ச்சை

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, கம்யூனிஸ்ட் என 5 முனை போட்டி நிலவுகிறது. தற்போதைய ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்திற்கு பெரும்பான்மை இல்லாத சூழலில், இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6, 2026 அன்று நடைபெறுகிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனை தொடர்ந்து மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ரெட்டிபாளையம் பகுதியில் வாக்கு சேகரிப்பு

இந்நிலையில், மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேலை ஆதரித்து நடைபெற்ற பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆரத்தி எடுத்தவர்களுக்கு வழங்கப்பட்ட பணமே அது என்றும், வாக்காளர்களுக்கு ஓட்டுக்காக பணம் வழங்கப்படவில்லை என்று தவெக நிர்வாகிகள் விளக்கம் அளித்தனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial