ரூ.1,850 கோடியில் சாலைகள் சீரமைப்பு… முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

சென்னை, மதுரை, நாகர்கோவில், நெல்லை உள்ளிட்ட நகரங்களின் குடிநீர், கழிவுநீர், சாலை மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்காக கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் நகரக்ஙளில் சுகாதாரமான நகரங்களாக மாற்ற பாதுகாப்பான குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை மீஞ்சூரில் ரூ.4,800 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கம் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஆவடி மாநகராட்சியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடியில் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை கீழ்ப்பாக்கத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் அதிகரிக்கும் திட்டம் ரூ.400 கோடியில் செயல்படுத்தப்படும். பழமையான 33 குடிநீர் திட்டங்களை சீரமைக்கப்படும்.

குன்றத்தூர், கூடுவாஞ்சேரி நந்திவரம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

ரூ.1000 கோடி செலவில் மதுரை, கடலூர் மாநகராட்சிகளில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னையில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகளை ரூ.210 கோடியில் மேம்படுத்தப்படும்.

நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும்.

சென்னை உட்பட அனைத்து நகரப்பகுதிகளின் சாலைகளும் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் சீரமைக்கப்படும்.

ரூ.2400 கோடியில் மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டங்கள் சீரமைக்கப்படும்.

நெல்லை மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் மின்உற்பத்திக்கு ரூ.256 கோடி ஒதுக்கீடு

பள்ளிகளை சுற்றியுள்ள சாலைகளில் மாணவ, மாணவிகள் நடந்து செல்ல பிரத்யேக நடைபாதை உருவாக்கப்படும்.

மாநிலம் முழுவதும் ரூ.305 கோடி செலவில் பூங்காக்கள் அமைக்கப்படும். ரூ.335 கோடி செலவில் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டிடங்கள் கட்டப்படும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial