ஐபோன் வரலாற்றில் புதிய அத்தியாயம்! இன்று வெளியாகும் மடிக்கக்கூடிய ஐபோன்?

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் அறிமுக நிகழ்ச்சி இன்று (செப்டம்பர் 9-ம் தேதி) நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஐபோன் அறிமுகமாகலாம் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்தியாவில் இந்த நிகழ்வு இரவு 10.30 மணிக்கு தொடங்கும். இந்த நிகழ்வை இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ளவர்கள் இணையம் வழியாக நேரலையில் பார்க்க முடியும்.

ஊடக அறிக்கைகளில் இந்த புதிய சாதனம் iPhone Ultra என்ற பெயரில் குறிப்பிடப்பட்டு வருகிறது. எனினும், ஆப்பிள் நிறுவனம் இதன் பெயர் அல்லது அம்சங்களை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இந்த சாதனத்தின் விலை சுமார் 2,000 அமெரிக்க டாலர்கள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, தற்போதைய ஆப்பிள் ஐபோன் மாடல்களைவிட அதிக விலை கொண்டதாக இருக்கும்.

மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில், ஆப்பிளின் நுழைவு அந்த சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial