இந்தியா புல்லட் ரயிலை உருவாக்கும் முயற்சியில் மேலும் ஒரு கட்டத்தை நோக்கி நகர்கிறது. B35 என குறிப்பிடப்படும் மணிக்கு 350 கி.மீ வேகத்தில் இயக்கக்கூடிய புதிய அதிவேக ரயிலை 2030-க்குள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் அதிவேக ரயில் திட்டத்தில் B28 ரயில் முக்கிய இடம் பெறுகிறது. பெங்களூருவில் உள்ள தனது அதிவேக ரயில் தயாரிப்பு வளாகத்தில் ரயில்களை உருவாக்கி வருகிறது. இது மணிக்கு 280 கி.மீ. வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் 2027-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சோதனைக்கு தயாராகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
B28 சோதனைகள் தொடங்குவதற்கு முன்பே, அதைவிட அதிக வேகத்தில் செல்லக்கூடிய B35 ரயிலுக்கான திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயிலுக்கு மணிக்கு 350 கி.மீ. என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கான திறன் மதிப்பீட்டை தேசிய அதிவேக ரயில் கழகம் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டமாக மும்பை–அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடம் உருவாகி வருகிறது. மொத்தம் 508 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில் ரயில்கள் அதிகபட்சமாக மணிக்கு 320 கி.மீ. வேகத்தில் இயக்கப்பட உள்ளன. மும்பை–அகமதாபாத் அதிவேக ரயில் திட்டத்தில் மலைப்பகுதிகளில் 8 சுரங்கங்கள் அமைக்கப்படுகின்றன. அவற்றில் 7 மகாராஷ்டிராவிலும், ஒன்று குஜராத்திலும் அமைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : பயனர்களின் Location Data விவகாரம் : Google-க்கு ரூ.4,000 கோடிக்கு மேல் அபராதம்

