செப்டம்பர் 11-ல் நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்: வங்கிகள் இயங்குமா?

வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11, 2026 அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வாரத்திற்கு ஐந்து நாட்கள் வேலை மற்றும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகை திட்டத்தை மாற்றியமைத்தல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 11-ந்தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன.

கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் செப்டம்பர் 28 முதல் 30 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் வேலைநிறுத்தமும், அக்டோபர் 26 முதல் காலவரம்பற்ற வேலைநிறுத்தமும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றால், வங்கிக் கிளைகளில் வழக்கமான நேரடி சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை உள்ளிட்ட கிளை சார்ந்த சேவைகளில் தாமதம் ஏற்படக்கூடும்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial