இன்று முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது : வங்கி வாடிக்கையாளர்களே கவனம்!

வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ள ஒருநாள் வேலைநிறுத்தம் காரணமாக இன்று முதல் தொடர்ந்து 4 நாட்களுக்கு வங்கிகளின் நேரடி சேவைகள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு வாரந்தோறும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர் சங்கங்கள் இன்று நாடு முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை வழக்கமான விடுமுறை நாட்களாகும். அதன் பின்னர் திங்கட்கிழமை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகளின் நேரடி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் இணையவழி வங்கி சேவைகள் மற்றும் ஏ.டி.எம். உள்ளிட்ட சில சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial