ரூ.5 லட்சம் பணமோசடி வழக்கில் பிக்பாஸ் பிரபலம் கைது

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமான நடிகை வர்ஷினி வெங்கட், ரூ.5 லட்சம் பண மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பெயரில் சென்னை கிண்டி போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை வர்ஷினி வெங்கட், கிண்டியில் இளைஞர் ஒருவரிடம் குறும்படம் ஒன்றை தயாரிக்க இருப்பதாக ரூ.5 லட்சம் வாங்கியுள்ளார். பணத்தை திரும்பக் கேட்ட அந்த இளைஞரை மிரட்டியதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து அந்த இளைஞர் அளித்த புகாரில், பணத்தை திரும்பக் கேட்டபோது தன்னை கிண்டி பகுதியில் அழைத்து சென்றதாகவும், அங்கு தாக்கி ரூ.50 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு செல்போன்கள் பறிக்கப்பட்டதாகவும் அந்த இளைஞர் புகார் அளித்துள்ளார். ரூ.5 லட்சத்தைத் தொடர்ந்து மேலும் ரூ.27 லட்சம் வழங்க வேண்டும் என்று தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் வர்ஷினி வெங்கட், சஞ்சய் உள்ளிட்ட 4 பேர் மீது கிண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து வர்ஷினி வெங்கட்டை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial