மதுராந்தகம், தாராபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் கடந்த 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில் இரண்டு தொகுதியிலும் தவெக வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.
பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி மதுராந்தகம் தொகுதியில் தவெகவும் தாராபுரம் அதிமுகவும் முன்னிலையில் இருக்கிறது.
மதுராந்தகம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்
மரகதம் குமாரவேல் – 20,189 (த.வெ.க.)
பரந்தாமன் – 13,872 (தி.மு.க.)
கனிதா சம்பத் – 11,589 (அ.தி.மு.க.)
தாராபுரம் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்
பானுமதி – 9,109 (அ.தி.மு.க.)
சத்தியபாமா – 8,186 (த.வெ.க.)
சுகன்யா – 6,693 (தி.மு.க.)

