இனி சாலையில் துர்நாற்றம் வீசாது! சென்னையில் வருகிறது கேப்சூல் கன்டெய்னர்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகள் மற்றும் பொது இடங்களில் உள்ள குப்பைத் தொட்டிகளில் இருந்து தினமும் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் இந்த குப்பைகளை வாகனங்கள் மூலம் கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள குப்பைக் கொட்டும் வளாகங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.

குப்பைகளை ஏற்றிச் செல்லும்போது சாலைகளில் அவை சிதறுவது, துர்நாற்றம் வீசுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. சுற்றுப்புறத் தூய்மையையும் பாதிக்கின்றன. இதனை கட்டுப்படுத்த ரூ.35 கோடி செலவில் புதிய திட்டம் தயாராகி வருகிறது.

குப்பைகள் சாலையில் சிதறாமல் இருக்கவும், துர்நாற்றம் வீசாமல் இருக்கவும் குப்பைகளை மூடிய கன்டெய்னர்களில் எடுத்துச் செல்லும் புதிய முறையை சென்னை என்விரோ சொல்யூஷன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்தத் திட்டத்துக்காக மொத்தம் 12 நவீன லாரிகள் பயன்படுத்தப்பட உள்ளன. அவற்றில் 10 லாரிகள் குப்பைகளை மாற்று நிலையத்திலிருந்து வெளியே கொண்டு செல்லவும், இரண்டு லாரிகள் நிலையத்துக்குள் குப்பைகளைக் கையாளவும் பயன்படுத்தப்பட உள்ளன

இந்தத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், குப்பைகள் வெளியில் தெரியாத வகையில் முழுமையாக மூடப்பட்ட கேப்சூல் வடிவ கன்டெய்னர்களில் அவற்றைக் கொண்டு செல்ல முடியும். மேலும், கன்டெய்னர்களில் குப்பைகளை அழுத்திச் சேமிப்பதால் அதிக அளவிலான கழிவுகளை ஒரே பயணத்தில் எடுத்துச் செல்ல முடியும். குப்பைகள் முழுமையாக மூடப்பட்ட கன்டெய்னர்களில் கொண்டு செல்லப்படுவதால், சாலைகளில் கழிவுகள் சிதறுவது மற்றும் துர்நாற்றம் பரவுவது போன்ற பிரச்சனைகளும் குறைய வாய்ப்புள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial