ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் தாக்குதலுக்கு உள்ளான சரக்குக் கப்பல் தீப்பிடித்து கடலில் மூழ்கிய சம்பவம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த ஜிஎஃப்எஸ் பிரைட் (GFS Pride) என்ற கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதற்கிடையில், கடலில் மிதக்கும் ஐபோன் பெட்டிகள் குறித்த காணொளிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.
அக்டோபர் 13ஆம் தேதி ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த ஜிஎஃப்எஸ் பிரைட் கப்பல் தாக்குதலுக்கு உள்ளானது. சிங்கப்பூர் கொடியுடன் பயணித்த ஜிஎஃப்எஸ் பிரைட் (GFS Pride) என்ற கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்தக் கப்பலில் மொத்தம் 2,824 சரக்குப் பெட்டிகளை ஏற்றிச் செல்லும் திறன் இருந்தது. ஆனால், விபத்து நடந்தபோது எத்தனை பெட்டிகள் கப்பலில் இருந்தன, அவற்றில் என்னென்ன பொருட்கள் இருந்தன என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.
கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, கடலில் சரக்குப் பெட்டிகளும் பொருட்களும் மிதப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. சில காணொளிகளில் ஐபோன் பெட்டிகள் மற்றும் விலை உயர்ந்த வாசனைத் திரவியப் பெட்டிகள் மிதந்து சென்றதை காணமுடிந்தது.
ஆயிரக்கணக்கான ஐபோன்கள் கடலில் மிதப்பதாகக் கூறும் சில படங்கள் செயற்கையாக உருவாக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

