சீனாவில் தனது தாயின் இறுதிச்சடங்குக்கான நல்ல நாளைத் தேர்வு செய்ய AI உதவியை நாடிய நபர், அது தவறான தேதியை பரிந்துரைத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட AI நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஜியாஷான் மாவட்டத்தைச் சேர்ந்த ஷி என்பவரின் தாய் கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்தார். தாயின் இறுதிச்சடங்கை நடத்துவதற்கு குடும்பத்தினர் முதலில் ஏப்ரல் 20-ம் தேதியை தேர்வு செய்தனர். அதில் திருப்தி படாத அவர், AI உதவியை நாடியுள்ளார்.
அந்த AI ஏப்ரல் 19-ம் தேதியை இறுதிச்சடங்குக்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது. AI அளித்த பதில் நம்பகமானதாகவும் பாரம்பரிய நடைமுறைகளை அறிந்தது போலவும் இருந்ததால் ஷி அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. அதன்பிறகு ஷியின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சாலை விபத்தில் படுகாயமடைந்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து AI தவறான தகவலை வழங்கியதாக AI நிறுவனத்துக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
மேலும், AI நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரியுள்ளார். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இதையும் படிங்க : AI துறையில் இந்தியாவுக்கு புதிய வலிமை.. ஹைதராபாத்தில் மைக்ரோசாப்ட் பிரம்மாண்ட திட்டம்

