‘ஜெயிலர் 2’ எதிரொலி? : தனுஷின் ‘ஓம்’ படத்திற்கு வந்த புதிய சிக்கல்? வெளியீட்டு தேதியில் மாற்றம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் செய்யப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

‘அமரன்’ படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓம்’ படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.

‘ஓம்’ திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதற்கு ஒருநாள் முன்பாக ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ திரைப்படம் திரைக்கு வருகிறது. ஒரே காலகட்டத்தில் இரண்டு பெரிய படங்கள் வெளியாகும் சூழலில், ‘ஓம்’ படத்தின் வெளியீட்டு தேதியை மாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘ஓம்’ திரைப்படத்தை அக்டோபர் 16-ல் இருந்து நவம்பர் 6-ம் தேதிக்கு மாற்ற தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எனினும், தேதி குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. படக்குழு புதிய வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த பிறகே ‘ஓம்’ எப்போது திரைக்கு வரும் என்பது உறுதியாகும்.

இதையும் படிங்க : ராகவா லாரன்ஸின் புதிய அவதாரம்.. ‘மகாவீர் கர்ணா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial