பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு காலமானார்!

பிரபல சமையல் கலைஞர் செஃப் தாமு (72) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். கடந்த சில நாள்களாக உடல்நலக் குறைவு காரணமாக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

யார் இந்த செஃப் தாமு?

செஃப் தாமு என்று அழைக்கப்படும் தாமோதரன், சமையல் கலையில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர். குறிப்பாக, தமிழ் தொலைக்காட்சி சமையல் நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் பிரபலமடைந்தார். பாரம்பரிய உணவு வகைகள் முதல் புதிய சமையல் முறைகள் வரை பலவற்றை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்கேற்று அசத்தினார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்ற விதம், போட்டியாளர்களுடன் அவர் பழகிய விதம் ஆகியவை ரசிகர்களைக் கவர்ந்தன.

கடந்த 2010ஆம் ஆண்டு, நீண்ட நேரம் தொடர்ந்து சமையல் செய்ததற்காக கின்னஸ் உலகச் சாதனைப் பதிவில் இடம்பிடித்தார். மேலும், சமையல் மற்றும் உணவுத் துறையில் கல்வி சார்ந்த தகுதிகளையும் பெற்றிருந்தார்.

2015ம் ஆண்டில் சமையல் துறையில் நீண்டகாலமாக ஆற்றிய பணிக்காக தென்னிந்திய சமையல் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். 2025ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய குடிமக்கள் விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});