சென்னை திருவொற்றியூர் கொலை சம்பவம் : 4 பேரை கைது செய்த போலீசார்

சென்னை திருவொற்றியூரில் கடன் தொடர்பாக கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த 28 வயது வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர் மேற்கு மாட வீதியைச் சேர்ந்தவர் பிரதீப் (28). தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு சுமார் 9 மணியளவில் பிரதீப் தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் அவரை தலையில் சரமாரியாக வெட்டியுள்ளனர்.இதில் பலத்த காயமடைந்த பிரதீப் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருவொற்றியூர் போலீசார் உடனடியாக அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் பிரதீப்பின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிரதீப்பின் தாய் சில ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு தெரிந்த ஒருவருக்காக மற்றொருவரிடம் கடன் வாங்கி கொடுத்திருந்தது தெரியவந்தது. அந்த கடனுக்காக இதுவரை ரூ.18 லட்சம் வரை செலுத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் தொடர்பாக மாதவரம் பகுதியில் பதுங்கியிருந்த நாராயணன், ஹரிகிருஷ்ணன், ஜபார் மற்றும் லோகேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial