தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழையால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்குகிறது. இந்நிலையில், அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
அதிகாரிகளுக்கு போட்ட உத்தரவு என்ன?
சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது, பொதுமக்களுக்கு பால், குடிநீர், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். சாலைகளில் தேங்கும் மழைநீரை அகற்றுதல், கால்வாய்களில் நீர் தடையின்றிச் செல்வதை உறுதி செய்தல், தாழ்வான பகுதிகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட பணிகளில் அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களுக்கு விரைவாகத் தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

