தீபாவளி பரிசாக ஊழியர்களுக்கு ஐபோன் வழங்கிய நிறுவனம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஊழியர்களுக்கு இனிப்புகள், பட்டாசுகள், பரிசுப் பொருட்கள் வழங்குவது பல நிறுவனங்களில் வழக்கமாக உள்ளது. ஆனால், டெல்லியைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு விலையுயர்ந்த ஐபோன் 16 மாடலை பரிசாக வழங்கியுள்ளது.

டெல்லியின் ரோஹிணி பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்று, இந்த ஆண்டு தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தனது ஊழியர்களுக்கு ஐபோன் 16 கைப்பேசிகளைப் பரிசாக வழங்கியுள்ளது. இதுதொடர்பான காணொளியை அந்த நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த வீடியோவில் வெவ்வேறு வண்ணங்களில் இருந்த கைப்பேசிகள் ஒவ்வொன்றும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. பரிசுகளைப் பார்த்த பெண் ஊழியர்கள் மகிழ்ச்சியுடன் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

காணொளி உண்மையானதா அல்லது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டதா என்ற சந்தேகத்தையும் சிலர் எழுப்பினர். அதற்குப் பதிலளித்த நிறுவனம், இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட காணொளி அல்ல என்று மறுத்துள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial