வீட்டின் மீது சாய்ந்த மரத்தை அகற்ற சொன்னவருக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, வீட்டின் மீது சாய்ந்து கிடக்கும் தென்னை மரத்தை அகற்றக் கோரிய நபருக்கு, பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குடியாத்தம் தாலுகா சேம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பி. மோகன் (44). கூலி வேலை செய்து வரும் இவர், அந்தப் பகுதியில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருவதாக தெரிவித்துள்ளார். மோகனின் வீட்டின் அருகே பக்கத்து வீட்டைச் சேர்ந்த கோவிந்தசாமி (60) என்பவருக்கு சொந்தமான தென்னை மரம் ஒன்று உள்ளது. அந்த மரம் மோகனின் வீட்டின் மீது சாய்ந்த நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

வீட்டின் மீது சாய்ந்துள்ள தென்னை மரத்தை அகற்றுமாறு பக்கத்து வீட்டைச் சேர்ந்த கோவிந்தசாமியிடம் கூறியுள்ளார். அதற்கு கோவிந்தசாமி, அந்த மரத்தை வெட்ட முடியாது அப்புறப்படுத்த முடியாது. உன்னை மரம் வெட்டுவது போல் வெட்டி கொலை செய்து புதைத்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பாக மோகன் குடியாத்தம் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் மனு மீது விசாரணை செய்துநடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial