இந்த மாடல் பவர் பேங்கை இனி விமானத்தில் எடுத்துச் செல்ல தடை..!

விமானப் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட மாடல் பவர் பேங்கை விமானங்களில் எடுத்துச் செல்ல விமானப் பாதுகாப்பு இயக்குநரகம் தடை விதித்துள்ளது.

கடந்த அக்டோபர் 11-ம் தேதி, டெல்லியில் இருந்து சென்னைக்கு சுமார் 180 பயணிகளுடன் இண்டிகோ பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. விமானம் சுமார் 36,000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது, பயணிகளின் உடைமைகளை வைக்கும் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, பயணி ஒருவரின் பவர் பேங்க் தீ விபத்துக்குக் காரணமாக இருந்தது தெரிய வந்தது. மேலும், அந்த பவர் பேங்க் தரமற்ற தயாரிப்பு என்பதும் தெரிய வந்தது. இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க குறிப்பிட்ட மாடல் பவர் பேங்கை விமானங்களில் எடுத்துச் செல்ல விமானப் பாதுகாப்பு இயக்குநரகம் தடை விதித்துள்ளது

இதனைத் தொடர்ந்து, MOBIKINS MK-PB-04 மாடல் பவர் பேங்கை விமானத்தில் எடுத்துச் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த மாடல் பவர் பேங்கை பயணிகள் கைப்பையில் எடுத்துச் செல்லவோ அல்லது விமானச் சரக்கு போக்குவரத்து மூலமாக அனுப்பவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாடு இந்தியாவில் இருந்து புறப்படும் மற்றும் இந்தியாவுக்கு வரும் விமானங்களுக்குப் பொருந்தும். பவர் பேங்க் தொடர்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திலும் பயணிகளின் உடைமைகள் கூடுதல் கவனத்துடன் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
HTML tutorial