கரூர் மாநகராட்சி சொத்து வரி நிலுவை பட்டியல் : இரண்டாவது இடத்தில் திமுக

கரூர் மாநகராட்சிக்கு அதிக அளவில் சொத்து வரி நிலுவை வைத்துள்ளவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், கரூர் மாவட்ட திமுக அலுவலகம் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. மாநகராட்சி இணையதளத்தில் வெளியிடப்பட்ட அதிக சொத்து வரி நிலுவை வைத்துள்ள 100 பேரின் பட்டியலில் இந்த தகவல் இடம்பெற்றுள்ளது.

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 1 முதல் 48 வார்டுகள் வரை சொத்து வரி வசூல் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதில் அதிக தொகை சொத்து வரி பாக்கி வைத்துள்ள 100 பேரின் விவரங்களை மாநகராட்சி இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

மாநகராட்சி வெளியிட்ட பட்டியலின்படி, கரூர் 33-வது வார்டில் திண்டுக்கல் சாலையில் உள்ள ராமசாமி மற்றும் நாராயணசாமி ஆகியோர் அதிக அளவில் சொத்து வரி நிலுவை வைத்திருப்பவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளனர்.

இந்த பட்டியலில் கரூர் மாவட்ட திமுக அலுவலகம் இரண்டாவது இடத்தில் இடம்பெற்றுள்ளது. கரூர் திமுக மாவட்ட அலுவலகத்திற்கு 2008 முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் சொத்து வரி நிலுவை சேர்ந்து ரூ.28,33,698 ஆக இருப்பதாக மாநகராட்சி வெளியிட்ட பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Saravanan
Saravananhttps://suryamalar.in/
முக்கியமான தமிழ் செய்திகள், தொழில்நுட்பம், சினிமா, சர்வதேச நிகழ்வுகள் மற்றும் மருத்துவம் குறித்த செய்திகளை தொடர்ந்து எழுதி வருகிறேன். நம்பகமான ஆதாரங்களின் அடிப்படையில் துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வாசகர்களுக்கு வழங்குவதே எனது நோக்கம்.
RELATED ARTICLES

Most Popular