தினமும் ஒரு வாழைப்பழத்தை இந்த நேரத்தில் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..?

வாழைப்பழம் அனைவரும் விரும்பி உண்ணும் பழமாகும். இதில் பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, இரும்பு மற்றும் நார்ச்சத்து போன்ற முக்கிய ஊட்டச்சத்துக்கள் அதிகமாக உள்ளன. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை தினமும் சாப்பிடலாம்.

காலை உணவுடன் வாழைப்பழம் சேர்த்து சாப்பிடுவது மிகவும் நல்லது. இதனால் வயிறு சீராக செயல்பட்டு நாள் முழுவதும் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். மதிய உணவுக்குப் பிறகு வாழைப்பழம் சாப்பிடுவது பசியை கட்டுப்படுத்தவும் செரிமானத்தை சீராக்கவும் உதவுகிறது. இதில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை குறைக்கிறது. இரவில் அதிக அளவில் சாப்பிடுவது சிலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்.

வாழைப்பழத்தில் உள்ள இயற்கை சர்க்கரைகள் உடலுக்கு உடனடி சக்தியை வழங்குகின்றன. இதன் காரணமாக உடல் உழைப்பு அதிகமாக இருக்கும் நபர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இதை அதிகமாக பயன்படுத்துகின்றனர். இதய ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. செரிமான ஆரோக்கியத்திற்கும் வாழைப்பழம் மிகுந்த பயன் தருகிறது. இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கலை குறைக்க உதவுகிறது. குறிப்பாக நன்கு பழுத்த வாழைப்பழம் உடலுக்கு பல நன்மைகள் தரும்.

தினமும் செவ்வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

செவ்வாழைப்பழம் பயன்கள்

செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் சி உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. இதனை உணவின் ஒரு பகுதியாக சேர்த்துக் கொள்வது செரிமானம், இதய ஆரோக்கியம் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகள் வழங்குகிறது.

செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து, பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி6, இரும்பு, கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் காணப்படுகின்றன. ஒரு செவ்வாழைப்பழத்தில் சுமார் 90 கலோரிகள், 21 கிராம் கார்போஹைட்ரேட், 3 கிராம் நார்ச்சத்து, 358 மி.கி. பொட்டாசியம் மற்றும் 8.7 மி.கி. வைட்டமின் சி உள்ளது.

செவ்வாழையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. மேலும், இதில் காணப்படும் சில ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கள் குடலுக்கு நன்மை செய்கிறது. இதனால் மலச்சிக்கல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற செரிமானம் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும்.

செவ்வாழைப்பழத்தில் நார்ச்சத்து இருப்பதால், சாப்பிட்ட பிறகு நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வை அளிக்கக்கூடும். இதனால் அடிக்கடி உணவு அல்லது அதிக கலோரிகளை எடுத்துக் கொள்வதை குறைக்க உதவலாம்.

வாழைப்பழத்தில் இயற்கையாகவே கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. அவை உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்க உதவுகின்றன. செவ்வாழையிலும் இயற்கை சர்க்கரைகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் இருப்பதால், அன்றாட உணவில் ஆற்றல் தரும்.

HTML tutorial